ஆக-31 முதல் ’60 வயது மாநிறம்’..!

60 VM - 17 TH AUG - AD

பிரமாண்டத்திற்கு பெயர்போன தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஒரு படம் தயாரிக்கிறார் என்றாலே அதை மிகப்பெரிய அறிவிப்பாக வெளியிடுவார்.. ஆனால் எப்போது இந்தப்படத்தை தயாரித்தார் என எந்த சத்தமும் காட்டாமல் ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, இந்துஜா, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் ’60 வயது மாநிறம்’ என்கிற படத்தை தயாரித்துள்ளார்.

இதோ இந்தப்படம் இப்போது ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை பாராட்டியது பெருமைக்குரியது. 60 வயது மாநிறம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.