50 நாள் ஆகியும் கூர் மழுங்காத ‘கத்தி’..!

தீபாவளி தினத்தன்று வெளியான ‘கத்தி’க்கு வயது இன்றோடு 50 நாட்கள்.. ஆனால் 50 நாட்கள் ஆகியும் இன்னும் பல தியேட்டர்களில் படம் நின்று விளையாடுகிறது. சமூகப்பிரச்சனையை மையமாக வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த இந்தப்படத்திற்கு பாராட்டுகளை விட  விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தன. ஆனால் அவை வேறு மாதிரியான விமர்சனங்கள்..

படம் நன்றாக ஓடுகிறதே என்கிற பொறாமையால் வந்த விமர்சனங்கள்.. ஆனால் படத்தின் தரம் பற்றி யாரும் குறை சொல்ல முடியவில்லை என்பதை இந்த 50 நாள் சாதனை சொல்லாமல் சொல்லிவிட்டது. ‘கத்தி’ டீமுக்கு நமது behind frames மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.