கவுண்டரின் ’49-ஓ’ சிங்கிள் ட்ராக் – இன்று ரேடியோ மிர்ச்சியில் கேட்கலாம்..!

உலகத்தின் மூலைமுடுக்கில் இருக்கும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது இரண்டு படங்கள்.. ஒன்று நம்ம சூப்பர்ஸ்டாரின் கோச்சடையான்.. இன்னொரு படம் ’49-ஓ’. பின்னே… ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் நம் கவுண்டமணி கதைநாயகனாக(வும்) களம் இறங்கியிருக்கும் படம் இல்லையா.?

இந்தப்படத்தில் யுகபாரதி எழுதி, ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்’ புகழ் ஜெயமூர்த்தி பாடிய “அம்மா போல அள்ளித்தரும் மழைதான்.. அவ ஆதாரமா நின்னா இல்லை குறைதான்..” என ஒரு பாடல் படத்தில் இடம்பெற்றுள்ளது.

படத்தில் மழை வரம் வேண்டி கவுண்டமணி பாடுவதாக அமைந்த இந்தப்பாடலின் சிங்கிள் ட்ராக்கை இன்று ரேடியோ மிர்ச்சி எஃப்.எம்மில் கேட்டு ரசிக்கலாம். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.