கவுண்டர் ரிட்டர்ன்ஸ்..! கவுட் டவுன் ஸ்டார்ட்..!! ; களைகட்டிய ‘49-ஓ’ இசை வெளியீட்டு விழா..!

கவுண்டமணி எப்படிப்பட்ட ஜாம்பவான் தெரியுமா, என்றெல்லாம் வளவளவென இழுக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.. கவுண்டமணி தற்போது ‘49-ஓ’ படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் அல்லவா.? அந்தபடத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு நடைபெற்றது.

கவுண்டமணியின் ஆத்மார்த்த நண்பரான சத்யாராஜும், கவுண்டமணியின் அதி தீவிர ரசிகரான சிவகார்த்திகேயனும் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்தது ஒரு ஸ்பெஷல் என்றால், கடந்த 39 வருடங்களாக தனது படங்களின் விழாக்கள் எதிலும் கலந்துகொள்ளத கவுண்டர் இந்த விழாவில் கலந்துகொண்டதுதான் ஹைலைட்.

கவுண்டருக்கு இந்தப்பக்கம் சிவகார்த்தியனும் சத்யராஜும் அமர்ந்துகொள்ள விழா முடியும்வரை இருவருடனும் மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தார் கவுண்டர். குறிப்பாக அவர் அதிகமாக சிவகார்த்திகேயன் காதில் தான் விழாவின் நிகழ்வுகளை வைத்து ஒவ்வொரு கமெண்ட்டாக அடித்துக்கொண்டிருந்தார். விழா மேடையில் அமர்ந்திருந்ததால் சிவகார்த்திகேயனால் வாய்விட்டு சிரிக்கவும் முடியாமல், அதேசமயம் சிரிப்பை அடக்கவும் முடியாமல் சிரமப்பட்டதை கண்கூடாக காணமுடிந்தது..

விழா தொடங்குவதற்கு முன்பே கீழே தன் பக்கத்தில் அமர்ந்திருந்த சத்யராஜிடம் “ஏம்ப்பா இந்தப்படத்துல லவ்வே இல்ல.. படத்துக்கு கூட்டம் வரும்கிற..?” என கவுண்டமணி கேட்டுள்ளார்.. “அது இல்லாததால தாண்ணே நிச்சயமா கூட்டம் வரும்” என்று சத்யராஜ் பதில் சொன்னாராம்.

சிவகார்த்திகேயன் பேசும்போது, “கவுண்டமணி சாரின் திறமையில் இருந்து கொஞ்சம் திருடித்தான் நாங்கள் இப்போது எங்கள் வண்டியை ஒட்டிக்கொண்டு இருக்கிறோம்.. அவர் பாதிப்பு இல்லாமல் இங்கு யாரும் இல்லை.. நான் இவ்வளவு நேரம் அவருடன் இந்த மேடையில் அமர்ந்திருப்பது நான் செய்த பாக்கியம். ஆனால் அவருடன் இவ்வளவு நேரம் பக்கத்தில் எவ்வளவு சிரமம் என்று எனக்குத்தான் தெரியும்.. நிமிஷத்துக்கு நிமிஷம் கவுண்டர்(பஞ்ச்) கொடுத்துக்கொண்டே இருப்பதால் என்னால் சிரிப்பை அடக்கிகொண்டு அமர்ந்திருப்பது சிரமமாக இருக்கிறது.. கே.ராஜன் சார் சொன்னதுபோல கவுண்டமணி-சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கணும்.. அதில் எனக்கும் ஒரு சின்ன கேரக்டர் கொடுக்கணும்.. அதற்காக காத்திருக்கிறேன்” என எமோஷனலாக பேசினார்.

சத்யராஜ் பேசும்போது, “எனக்கு அழகான ஹீரோயின்களுடன் இணைந்து நடித்தபோது கிடைத்த சந்தோஷத்தை விட கவுண்டமணி அண்ணனுடன் இணைந்து நடிக்கும்போது ஏற்படும் ஜாலியே தனி.. ஷூட்டிங்ஸ்பாட்டில் ஒரே கேலியும் கிண்டலுமாகத்தான் இருக்கும்.. ஆனால் அதில் ஒன்றைக்கூட இப்போது வெளியில் சொல்லமுடியாது. சொன்னால் எனக்குமட்டுமல்ல.. கவுண்டமணி அண்ணனுக்கும் பிரச்சனை” என தங்களது ஷூட்டிங் கால அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் சத்யராஜ்.

இறுதியாக் கவுண்டமணி பேசினார். அவரது மேடைப்பேச்சு பாணியே புதிதாக இருந்தது. படத்தை பற்றி நறுக்கு தெரித்தாற்போல பல விஷயங்களை கூறி படத்தை அவர் திரும்ப திரும்ப புரமோட் பண்ணிய விதம் கைதட்டலை அள்ளியது.. “விவசாயிகள் விலை நிலங்களை விற்க கூடாது.. ஒரு வருஷம் வெள்ளாமை இல்லைன்னா, அடுத்த வருஷம் சரியாகிட்டு போகுது.. விவசாயி கடைசிவரை விவசாயியாகத்தான் இருக்கணும்.. அந்த கருத்தை இந்தப்படம் வலியுறுத்துவதாக இருப்பதால் தான் இதில் நடிக்க சம்மதித்தேன்” என காமெடியாகவும் அதேசமயம் கருத்தாகவும் பேசி பார்வையாளர்களை மகிழ்வித்தார்.

கவுண்டர் ரிட்டர்ன்ஸ்..! கவுன்ட் டவுன் ஸ்டார்ட்..!!