ஞாபகம் வருதே ; சூர்யாவை அழைத்துவந்த ‘நேருக்கு நேர்’

neruku ner

சூர்யா திரையுலகில் நுழைந்து 21 வருடங்கள் முடிந்து இதோ அவரது திரையுலகில் 22ஆம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார் சூர்யா.. ஆம்.. 21 வருடங்களுக்கு முன் அவர் முதன்முதலாக அறிமுகமான நேருக்கு நேர் திரைப்படம் வெளியான நாள் இன்று. எந்த ஒரு ஹீரோவுக்கும், அது வாரிசு நடிகராக இருந்தாலும் முதல் படத்திலேயே ரசிகர்களிடம் வரவேற்பு கிடைப்பது என்பது ஒரு வரம். ஆனால் அந்த வரம் சூர்யாவுக்கு கிடைத்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

மணிரத்னம் தயாரிப்பு, வசந்த் டைரக்சன், ஜோடியாக சிம்ரன், நண்பனாக விஜய், எவர்கிரீன் ஹிட்டுகளாக பாட்டுக்களை கொடுத்த தேவா என சூர்யாவின் முதல் படமே அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து ரசிகர்களிடம் அவரை அழைத்து சென்றது.. பின்னர் நந்தா, அவரை உருமாற்றியது, கஜினியும் காக்க காக்கவும் அவரை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியதெல்லாம் நாம் அறிந்த வரலாறு தானே..?