அனிருத் வசமாகிய 2௦14 தமிழ் சினிமா…!

 

ஒரே பாடலின் மூலம் உலகப்புகழ் அடைய முடியும் என்பதை உணர்த்தி தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளர் வரிசையில் நிலையான இடத்தை பிடித்துவிட்டார் அனிருத். அவரது இசை இளைஞர்களை துள்ளல் ஆட்டம் போடவைக்கிறது என்றால் அதில் மிகையேதுமில்லை.

கடந்தவருடம் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை என இரண்டு ஆல்பங்களை தந்தவர், இந்தவருடம் மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி, கத்தி, காக்கிசட்டை என நான்கு படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் பாடல்கள் வெளியானாலும் ‘காக்கி சட்டை’ 2௦15ல் தான் வெளியாகிறது.

இவர் இசையமைத்த படங்களின்  பாடல்கள் அனைத்தும்  சூப்பர்ஹிட்டாக, இப்போது அனிருத்தின் கிராப் உச்சத்தில் இருக்கிறது.. அதுமட்டுமல்ல அவரது சிங்கிள் ஆல்பமான ‘சான்ஸே இல்ல’ சூப்பர் ஹிட்டானது. மேலும் வரும் ஜனவரி 31ல் மலேசியாவிலும் ஜூலை மாதம் சிங்கப்பூரிலும் மியூசிக் லைவ் கான்செர்ட் நடத்த இருக்கிறார் அனிருத்.