நவ-29ல் 2.O ரிலீஸ் உறுதி..!

2.O release

காலா படத்திற்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்ட, சொல்லப்போனால் கபாலி படம் படமாக்கிக்கொண்டு இருந்த சமயத்திலேயே துவங்கப்பட்டது தான் ஷங்கர்-ரஜினி கூட்டணியின் 2.O’. மிக பிரமாண்டகியமான பஃஅட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தில் அக்சய் குமார் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தப்படம் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது.. பின்னர் இந்த வருடம் ஜனவரி 25-ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்தனர் அந்த தேதியும் தள்ளிப்போக, அதை எடுக்கட்டும் விதமாகத்தான் காலா படத்தை ரசிகர்களுக்காக ரிலீஸ் செய்தார் ரஜினி.

2.O படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளை முடிக்க காலதாமதம் ஆனதால் இதுவரை அடுத்த ரிலீஸ் தேதியை உறுதியாக .அறிவிக்காமல் இருந்தார்கள். தற்போது கிராபிக்ஸ் குழு தாங்கள் தற்போது கூறியுள்ள நேரத்திற்குள் படத்தின் வேலைகளை முடித்து தருவதாக கூறியுள்ளதை தொடர்ந்து வரும் நவ-29ஆம் தேதி படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.