‘2.O’வில் அக்சய் குமார் கெட்டப் வெளியானது..!

akshay kumar get up in 2.O

இயக்குனர் ஷங்கர் படங்களை பொறுத்தவரை படம் வெளியாகும் வரை படப்பிடிப்பில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் கன்னித்தீவு ரகசியங்கள் தான்.. படக்குழுவினரும் கூட சத்தியத்திற்கு கட்டுப்பட்டது போல படம் பற்றிய தகவல்களையோ அல்லது புகைப்படங்களையோ சங்கராக வெளியிடும் வரை ரகசியக்காப்பு பிரமாணம் செய்தவர்கள் போல அவ்வளவு சீக்ரெட்டாக வைத்திருப்பார்கள்.

இதுதவிர சங்கர் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சிகளின் மூலமாகவும் படப்பிடிப்பை கண்காணித்து வருபவர்.. ஆனால் இவ்வளவு கெடுபிடிகள் இருந்தும் தற்போது ரஜினியை வைத்து அவர் இயக்கிவரும் ‘2.O’வில் அக்சய் குமாரின் கெட்டப் வெளியாகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.. ஆனால் அக்சய் குமாரின் கெட்டப்போ ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. இந்தப்படத்தில் அக்சய் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.