100வது நாளை எட்டியது 2.O’ படத்தின் படப்பிடிப்பு..!

2.O

கடந்த டிச-15ஆம் தேதி ஷங்கர் டைரக்சனில் ரஜினி நடிக்கும் 2.O’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதோ இப்போது ஏழு மாதங்கள் ஆன நிலையில் படத்தின் 100வது நாள் படப்பிடிப்பை சமீபத்தில் தான் நடத்தி முடித்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

அதாவது படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளதாம். இந்த 50 சதவீதத்தில் இரண்டு சண்டைக்காட்சிகள், ரஜினியும் வில்லனாக நடிக்கும் அக்சய் குமாரும் பங்கேற்ற க்ளைமாக்ஸ் காட்சி ஆகியவற்றை படம்பிடித்துவிட்டாராம் இயக்குனர் ஷங்கர்