சூப்பர் ஸ்டார் ரஜினியையும் பாலிவுட் நடிகர் அக்சய் குமாரையும் வைத்து தான் இயக்கிவரும் ‘2.O’ படத்தின் 50 சதவீத படிப்பிடிப்பை முடித்துவிட்டார் இயக்குனர் ஷங்கர்.. அதுமட்டுமல்ல, சிட்டி’ ரோபோ ரஜினியுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் ஷங்கர்..
ஆரம்பத்தில் இருந்தே இந்தப்படம் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டு வருகிறது. அதற்கேற்ற மாதிரி இந்தப்படத்தின் பூஜை தினத்தன்றே ‘வசீகரன்’ லுக்கில் தான் கலந்துகொண்டார் ரஜினிகாந்த். ஆனால் இது எந்திரன் படத்தின் தொடர்ச்சி அல்ல, அதாவது இரண்டாம் பாகம் அல்ல என்கிற தகவல் கசிந்துள்ளது. இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டுள்ளார் இந்தப்படத்தில் சவுன்ட் இன்ஜீனியராக பணியாற்றும் ரசூல் பூக்குட்டி.