‘2டி’ தயாரிப்பில் ஒரு ‘3டி’.. சூர்யாவின் ‘மாஸ்’ அதிரடி’..!

சூர்யா ஒரு நடிகராக மட்டும் இருந்தபோது இருந்த எதிர்பார்ப்பு, அவர் தயாரிப்பாளர் ஆனதும் ‘அதுக்கும் மேல’ என கூடிவிட்டது. கமர்ஷியல், அதற்கேற்ற மாதிரி கமர்ஷியல், கதை என ஏரியாவாரியாக படங்களை தயாரித்தும் வருகிறார். அதேசமயம் இன்னொரு பக்கம் டெக்னிக்கலாகவும் அடுத்த படியில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

 

ஆம்.. ஸ்டுடியோ கிரீனும் சூர்யாவின் ‘2டி’ நிறுவனமும் இணைந்து வெங்கட் பிரபுவின் டைரக்சனில் உருவாக்கி வரும் ‘மாஸ்’ படம் தமிழ் சினிமாவிலேயே முதன்முதலாக ‘3டி’ பார்மேட்டில் படம்பிடிக்கப்பட்டு வருகிறது.. தவிர ஸ்டுடியோ கிரீனுடன் ஈராஸ் நிறுவனமும் ‘மாஸ்’ பட வெளியீட்டில் இணைந்திருப்பதும் படம் நிச்சயம் ‘மாஸ்’ ரிலீசாகாத்தான் இருக்கும் என சொல்லவைத்திருக்கிறது.