1988 கமலை ஞாபகப்படுத்திய கௌதம் மேனன்..!

 என்னை அறிந்தால் படம் பார்த்தவர்கள் அதில் சில இடங்களில் ‘வேட்டையாடு விளையாடு’ பட காட்சிகலின் சாயல் தெரிவதாக சொல்கிறார்களே அதைப்பற்றிய விஷயம் இல்லை இது.. எண்பதுகளின் சினிமா ரசிகர்களுக்கு அஜித் கையில் அணிந்திருந்த காப்பும் படத்தில் அவரது கேரக்டரின் பெயரான சத்யதேவும் (சத்யா) சில பழைய நினைவுகளை கிளறிவிட்டிருக்கும்.

உண்மைதான் 1988ல் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் கமல் மிகவும் உக்கிரமான இளைஞாக நடித்த ‘சத்யா’ படம் வெளியானது. அந்தப்படத்தில் கமலின் பிரதான அடையாளம், ஆயுதம் எல்லாமே அவர் கையில் அணிந்திருந்த காப்புதான். இன்றும் கூட கமலின் கையில் அந்த காப்பை பார்க்கலாம். கௌதம் மேனன் கூட ஒரு பேட்டியின்போது, ‘சத்யா’ படத்தை பார்த்தபின்னர் தான் தனக்குள் இயக்குனராகும் எண்ணமே எழுந்தது என்று கூறியுள்ளார். அந்த ‘சத்யா’விற்குத்தான் ‘என்னை அறிந்தால்’ மூலம் இவ்விதமாக மரியாதை செய்திருக்கிறார் போலும்.