3மணி நேரம்.. 15000 டிக்கெட்… கதவை சாத்தியது அபிராமி..!

இது ஏதோ சிக்னலோ, கோட் வார்த்தையோ என குழம்பவேண்டாம். சூப்பர்ஸ்டாரின் ‘கோச்சடையான்’ செய்திருக்கும் சாதனையைத்தான் அப்படி சொல்லியிருக்கிறோம். மே-9ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘கோச்சடையான்’ படத்திற்கான முன்பதிவு நேற்று ஆரம்பித்தது.

இதில் அபிராமி மெகாமாலை பொறுத்தவரை மூன்றுமணி நேரத்திலேயே 15000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. அபிராமியில் உள்ள நான்கு திரையரங்குகளிலும் முதல் மூன்று நாட்களுக்கு இனி புக் பண்ண டிக்கெட் இல்லை என ஆன்லைன் கதவை சாத்திவிட்டது அபிராமி.

படத்தை ரிலீஸ் பண்ணிவிட்டு தியேட்டர் பக்கம் யாரும் வரமாட்டார்களா என பலர் ஒரு பக்கம் ஏங்கிக்கொண்டிருக்க, அத விஷயத்தில் தான் என்றைக்குமே அசைக்கமுடியாத சாதனை மன்ன்ன் தான் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் சூப்பர்ஸ்டார். ம்ம்ம்.. அதற்கெல்லாம் வரம் வாங்கி வந்திருக்கவேண்டும்.. அவர் வாங்கி வந்திருக்கிறார்.