தமிழ் திரையுலகுக்கு இன்னொரு மணிகண்டன் புதிய இயக்குநராக கிடைத்திருக்கிறார். ‘மிர்ச்சி’ சிவா, ஓவியா, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘144’ படத்தின் இயக்குனர் மணிகண்டன். சண்டிகரில் போய் மல்டிமீடியா படித்துவிட்டு, சென்னையில். அனிமேஷன் கதைகள், நாடகங்கள் என நிறைய பணியாற்றிய அனுபவத்தில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் மணிகண்டன்.
இரண்டு ஊர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையும் அதற்கு போடப்படும் தடையுத்தரவும் தான் படத்தின் கதை. ‘144’ படம் தடை உத்தரவு சட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தாலும், அதே நேரத்தில் இது மிகவும் சீரியஸான கதையாக இல்லாமல். கொஞ்சம் நகைச்சுவை கலந்து கதையைச் சொல்லியிருக்கிறாராம் மணிகண்டன்.. இந்தப்படம் வரும் நவ-27ல் ரிலீஸாகிறது.