அஞ்சானுக்கு 100 ஸ்கெட்ச் போட்ட ஓவியர்..!

 

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ஒவியங்களை பலரும் எதிர்பாரா வண்ணம் பிரம்மிக்கும்படியாகவரைந்து அவரின் பாரட்டையும் பெற்றவர் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.. சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ‘சிகரம் தொடு’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கமல், கே.ஜே.ஜேசுதாஸ், கே.எஸ்.ரவிகுமார், தனுஷ் ஆகியோருக்கு ஓவியங்களாக வரையப்பட்ட அவர்களது போட்டோ பிரேமிட்டு நினைவுப்பரிசாக தரப்பட்டது. அந்தப்படங்களை வரைந்தது சாட்சாத் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் தான்…

‘சிகரம் தொடு’ விழாவில் கொடுப்பதற்காக வரையப்பட்டதாலோ என்னவோ அவர்களை இமயமலையின் பின்னணியில் வரைந்து இருந்தார் ஏ.பி.ஸ்ரீதர். அதுமட்டுமல்ல தற்போது சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘அஞ்சான்’ படத்திற்கு கிட்டத்தட்ட இதேபோன்று 100 ஸ்கெட்ச்களை போட்டுத்தந்திருக்கிறார் ஸ்ரீதர். சூர்யா, சமந்தா, லிங்குசாமி ஆகியோரின் உருவங்களை கொண்ட அந்த ஓவியங்கள் படத்தின் டைட்டில்கார்டு போடப்படும்போது அதன் பின்னணியில் இடம்பெறுகிறதாம்.