‘பையா’ படத்தால் கதையை மாற்றிய விஜய் மில்டன்..!

விக்ரமை வைத்து விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘1௦ எண்றதுக்குள்ள’ படம் ரோடு மூவி வகையை சேர்ந்தது.. இந்தக்கதையை கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு முன்பே விஜய் மில்டன் எழுதினாராம்.. ஆனால் அந்த நேரத்தில் லிங்குசாமியின் ‘பையா’ இதேபோல ரோடு மூவி’யாக வெளியானதால் தனது படத்தில் பல மாறுதல்களை செய்து, இதை வித்தியாசமான இன்னொரு ரோடு மூவியாக மாற்றிவிட்டாராம் இயக்குனர் விஜய் மில்டன்..

இந்தப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ள சமந்தா இந்தப்படத்தில் கமிட்டானதற்கு இரண்டு சுவாரஸ்யமான காரணங்கள் இருக்கின்றனவாம். ஒன்று கத்தி படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமந்தாவின் நடிப்பையும் திறமையையும் பார்த்து, அவரை விஜய் மில்டனிடம் சிபாரிசு செய்தது ஏ.ஆர்.முருகதாஸ் தானாம். அதுமட்டுமல்ல விஜய் மில்டனின் ‘கோலிசோடா’ படத்தை முதலில் பாராட்டி ட்வீட் பண்ணியவர் சமந்தா தான். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சமந்தாவை சந்திக்க சென்ற இடத்தில் இந்தக்கதையை சொல்ல, அவரும் உடனே சம்மதித்துவிட்டாராம்.