அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்!!

IMG-20201101-WA0039அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு இந்திய ஹச் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் அஞ்சலி செலித்தியுள்ளார்.

தனது இரங்கல் அறிக்கையில்

தஞ்சை மாவட்டத்தில் நானும் அமைச்சர் துரைக்கண்ணுவும் ஒரே தாயின் வயிற்றில் பிறக்க வில்லை என்றாலும் ஒரே மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள்…

இளமைப்பருவம் முதலே நாங்கள் மிக நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தோம். அமைச்சர் துரைக்கண்ணு அரசியலில் பயணித்தாலும் கூட அனைத்து மக்களிடமும் அனுசரணையாக பழகக்கூடிய ஒரு நல்ல மனிதர்.அவரது இழப்பு வேளாண் துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அதிலும் ஒரு பால்யகால நண்பனை இழந்து நிற்கும் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சரும் எனது நண்பருமான துரைக்கண்ணுவின் ஆன்மா அமைதியின் நிழலில் இளைப்பாற இந்திய அசோசியேஷன் சார்பில் இறைவனை வேண்டுகிறேன்.’ என்று கூறியுள்ளார்.

இப்படிக்கு,
தலைவர்,
பிரசிடெண்ட் அபூபக்கர்,
இந்திய ஹஜ் அசோசியேஷன்